திண்டிவனம் அருகே வாலிபர் அடித்துக்கொலை

திண்டிவனம் அருகே விளை நிலத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திண்டிவனம் அருகே வாலிபர் அடித்துக்கொலை
Published on

திண்டிவனம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே புலியனூர் கிராமத்தில் விவசாயி ஒருவருக்கு சொந்தமான விளை நிலத்தில் நேற்று காலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.

இதைபார்த்த அக்கிராம மக்கள் வெள்ளிமேடுபேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்தனர். வாலிபரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் யார்? எந்த ஊர் என்று தெரியவில்லை. மேலும் அவருடைய கை, கால், முதுகு பகுதிகளில் காயம் இருந்தது. அந்த வாலிபர் ஜட்டி மட்டும் அணிந்திருந்தார். அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

பிணமாக கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com