கேரளாவில் கொடூரம் - 80 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் 80 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 36 வயது நபரை போலீசார் கைது செய்தனர். #Youthheld #80yearold
கேரளாவில் கொடூரம் - 80 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்துக்குட்பட்ட எடக்காடு பகுதியில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி தனியாக வாழ்ந்து வருகிறார்.

நேற்று காலை இவரது வீட்டுக்குள் புகுந்த விஜேஷ்(36) என்ற காமுகன் அந்த மூதாட்டியின் வயதையும் பொருட்படுத்தாமல் பாலியல் பலாத்காரம் செய்தார். அவனது பிடியில் இருந்து தப்புவதற்காக மூதாட்டி பயங்கரமாக அலறி, கூச்சலிட்டார்.

அவரது கூச்சலை கேட்டு அக்கம்பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் அங்கிருந்து தப்பியோடிய விஜேஷை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். #Youthheld #80yearold 

X

Maalai Malar
www.maalaimalar.com