

திருப்பூர்:
திருப்பூர் அங்கேரி பாளையம் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் நவீன் (வயது 21) பிகாம், சிஏ. படித்து உள்ள இவர் மகளிர் சுய உதவி குழுவில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கோவில்வழி அருகே உள்ள புதுபிள்ளையார் நகர் பகுதியில் உள்ள பி.ஏ.பி கிளை வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அங்கு நண்பர்களுடன் சென்ற நவீன் கால்வாயில் குளித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக நவீனை தண்ணீர் இழுத்து சென்றது. நண்பர்கள் காப்பாற்ற முயன்ற போது அவர்களால் முடியவில்லை. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டனர். அப்போது அவர் உயிரிழந்து இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருப்பூர் ஊரக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.