கோட்டக்குப்பத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பட்டதாரி வாலிபர் பலி

புதுவையை அடுத்த கோட்டக்குப்பத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பட்டதாரி வாலிபர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோட்டக்குப்பத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பட்டதாரி வாலிபர் பலி
Published on

சேதராப்பட்டு:

புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் மேட்டு தெருவை சேர்ந்தவர் தமிமுன் அன்சாரி. (வயது 26). பி.பி.ஏ. பட்டதாரி. இவரது அண்ணன் சாதிக் அலி சென்னையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு தமிமுன் அன்சாரி தனது அண்ணனின் மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு புதுவைக்கு வந்தார்.

பின்னர் கருவடிக்குப்பம் ரவுண்டானா கிழக்கு கடற்கரை சாலை வழியாக வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். கோட்டக்குப்பம் அருகே வந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட தமிமுன் அன்சாரி படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தமிமுன் அன்சாரி மீது மோதிய வாகனத்தை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com