

மேலசொக்கநாதபுரம்:
போடி அருகே சிலமலை டி.எஸ். பி. காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் கருப்புசாமி (வயது21). இவர் தனது வீடு அருகே உள்ள மின் கம்பத்தில் சாய்ந்தவாறு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மின்சாரம் தாக்கியிருந்தால் தூக்கி எறியப்பட்டிருப்பார். ஆனால் மின்கம்பத்தில் சாய்ந்தவாறு உடலில் எந்தவித காயம் இல்லை.
இதனால் வாலிபரின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
பிரேத பரிசோதனைக்காக கருப்பசாமியின் உடல் தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
முடிவு வந்த பிறகே வாலிபர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து தெரியவரும். மேலும் இது குறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.