சோனியா காந்தி குடும்பத்துக்கு சிறப்பு படை பாதுகாப்பை நீட்டிக்க இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

சோனியா காந்தி குடும்பத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு கமாண்டோ படை பாதுகாப்பை நீக்கிய மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் இன்று இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்கள்
Published on

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்தினருக்கு (மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி) இதுவரை எஸ்.பி.ஜி. என்று அழைக்கப்படும் சிறப்பு பாதுகாப்பு படை கமாண்டோக்களின் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது.
 
இதேபோல், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், அவரது மனைவி குர்சரண் கவுர் ஆகியோருக்கும் எஸ்.பி.ஜி. பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

மத்திய அரசு சமீபத்தில் அதிரடியாக சோனியா காந்தி, மன்மோகன் சிங் குடும்பத்தினருக்கு அளித்து வந்த இந்த பாதுகாப்பை ரத்து செய்து விட்டது. அதற்கு மாற்றாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இசட்-பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு கமாண்டோ படை பாதுகாப்பை நீக்கிய மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் இன்று இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com