அவினாசியில் ஒருதலை காதல்தோல்வியால் வாலிபர் தற்கொலை

அவினாசியில் ஒருதலை காதல்தோல்வியால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

அவினாசி:

அவினாசி பழங்கரை ஊராட்சி பெரியாயி பாளையத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் அருண் (வயது 20). இவர் ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்தார்.

இந்நிலையில் அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணமானது. அந்த விரக்தியில் அருண் போதைக்கு அடிமையானார். நேற்று வாட்ஸ்- அப்பில் தனது சாவுக்கு யாரும் காரணமல்ல என்று பதிவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com