மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் வாலிபர் தற்கொலை

அம்பை அருகே மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

ஆலங்குளம்:

அம்பை அருகே உள்ள சிவந்திபுரம் வேல்முத்தன்பட்டியை சேர்ந்தவர் லெட்சுமணன் (வயது 31). தொழிலாளி. இவருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் இவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் லெட்சுமணனுடன் கோபித்து கொண்டு அவரது மனைவி ஆலங்குளத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார். 

இந்நிலையில் கடந்த 3-ந் தேதி ஆலங்குளம் சென்ற லெட்சுமணன் குடும்பம் நடத்த வருமாறு மனைவியை அழைத்துள்ளார். ஆனால் அவர் மறுத்துள்ளார். இதில் மனமுடைந்த லெட்சுமணன் அங்கு விஷத்தை குடித்து உயிருக்கு போராடினார். உடனடியாக அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com