குடியால் சீரழிந்த குடும்பம் - மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து வாலிபர் தற்கொலை

குடிப்பழக்கத்தால் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதால் அந்த குடும்பமே தற்போது ஆதரவற்ற நிலையில் உள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே உள்ள அய்யாப்பட்டி பெரியகோம்பை பட்டியைச் சேர்ந்த பழனியாண்டி மகன் சின்னாண்டி (வயது 34). தேங்காய் உறிக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இவரது மனைவி ஆண்டியம்மாள். மில் வேலைக்கு சென்று வருகிறார். இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கணவரின் குடிப்பழக்கத்தால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் சின்னாண்டி தன் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பலத்த காயங்களுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

குடிப்பழக்கத்தால் தொழிலாளி உயிரிழந்த நிலையில் தற்போது அவரது மனைவி மற்றும் 4 குழந்தைகள் நிர்கதியாய் தவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com