போலீஸ் விசாரணைக்கு பயந்து கழுத்தை அறுத்துக் கொண்ட வாலிபர்

ராயபுரம் அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் ஒருவர் கழுத்தை அறுத்துக் கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

ராயபுரம்:

புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி. நகர் பகுதியில் சிலர் கத்தியுடன் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அங்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாலிபர் கத்தியுடன் கலாட்டா செய்வது தெரிய வந்தது. அவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். கத்தியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் அழைத்துச்சென்றனர்.

அப்போது அவர், வாயில் மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து தனது கழுத்தை அறுத்துக்கொண்டார். ரத்தும் சொட்டச் சொட்ட நின்று கொண்டிருந்த அவரை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

போலீஸ் விசாரணையில் கழுத்தை அறுத்துக் கொண்ட வாலிபரின் பெயர் மணிகண்டன் (20) என்பதும், பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் என்றும் விசாரணைக்கு பயந்து கழுத்தை அறுத்துக் கொண்டதும் தெரிய வந்தது. இவரை புதுவண்ணாரப்பேட்டை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com