கோவையில் கல்லூரி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

கோவையில் திருமண ஆசை காட்டி கல்லூரி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கடத்தல்
கடத்தல்
Published on

கோவை:

கோவை மதுக்கரை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அப்புகுட்டி. இவரது மகன் மதன்குமார் (வயது 23). இவருக்கும் பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. மாணவியை மதன்குமார் அடிக்கடி சந்தித்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி வந்தார்.

கடந்த 19-ந் தேதி மாணவியின் பெற்றோர் பழனிக்கு சென்றனர். மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். பெற்றோர் திரும்பி வந்து பார்த்த போது மாணவி மாயமாகி இருந்தார். இதில் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியை மதன்குமார் திருமண ஆசை காட்டி கடத்தி சென்றது தெரிய வந்தது. 

மதுக்கரை அருகே மதன்குமார் அக்கா வீட்டில் இருந்த மாணவியை போலீசார் மீட்டனர். பின்னர் அவரை திருமண ஆசை காட்டி கடத்தி சென்ற மதன்குமாரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com