காதலை கைவிட்டதால் இளம்பெண் படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்ட வாலிபர் கைது

களக்காடு அருகே இளம்பெண் காதலை கைவிட்டதால் அவர் படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

நெல்லை:

களக்காடு அருகே உள்ள கீழவடகரை கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் மகன் மதன்ராஜ் (வயது 26).

இவர் அந்தப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அப்போது அவர் காதலியுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துள்ளார்.

அவர்கள் காதலுக்கு பெண் வீட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதைத்தொடர்ந்து அந்த இளம்பெண் காதலை கைவிட்டார். மேலும் அந்த வாலிபருடன் பேசுவதையும் நிறுத்தி விட்டார்.

இந்த நிலையில் மதன்ராஜ், தன்னுடன் காதலி இருக்கும் படத்தை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார். இதை அந்த இளம்பெண் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அந்த பெண்ணின் தந்தை களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மதன்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com