வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சில்மி‌ஷம்- வாலிபர் கைது

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

மதுரை:

மதுரை மாவட்டம், காடுபட்டியைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி. இவரது மனைவி தீபிகா (வயது 25). இவர் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அசோக் (30) என்ற வாலிபர், தீபிகாவின் வீட்டுக்குள் புகுந்து அவரது கையை பிடித்து இழுத்து சில்மி‌ஷம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் அலறியடித்து வெளியே ஓடி வந்த தீபிகா அக்கம், பக்கத்தினரிடம் நடந்த சம்பவத்தை கூறினார். மேலும் அசோக்கின் மனைவி மற்றும் தாயாரிடமும் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் தீபிகாவை மிரட்டியுள்ளனர். இது குறித்து காடுபட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக்கை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com