கரகாட்ட பெண்ணுடன் கள்ளத் தொடர்பு- நண்பரை வெட்டி கொன்ற வாலிபர்கள் கைது

கரகாட்டக்கார பெண்ணுடன் ஏற்பட்ட கள்ளத் தொடர்பால் நண்பரை வெட்டிக் கொன்ற வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கொலை செய்யப்பட்ட சதீஸ்குமார்
கொலை செய்யப்பட்ட சதீஸ்குமார்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே உள்ள அஞ்சுக்குழிப்பட்டியைச் சேர்ந்த முருகன் மகன் சதீஸ்குமார் (வயது 30). தனியார் கல்லூரியில் லேப் டெக்னீஷியனாக பணிபுரிந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு கல்லூரியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். இவருக்கு திருமணம் ஆகி 1 குழந்தை உள்ளது.

நேற்று இரவு பெரிய பள்ளப்பட்டி குளம் அருகே சதீஸ்குமார் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

மது போதையில் அவருடன் வந்த வாலிபர்கள் சதீஸ்குமாரை வெட்டிக் கொன்றது தெரிய வந்தது. இது குறித்து சந்தேகத்தின் பேரில் பெரியபள்ளப்பட்டியைச் சேர்ந்த பிரவீன்குமார் (24), பார்த்திபன் (25) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், பிரவீன்குமாரின் மனைவி செல்லாயி கரகாட்டம் ஆடி வந்துள்ளார். இவருடன் சதீஸ்குமார் பழகி வந்தார். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இது குறித்து பிரவீன்குமாருக்கு தெரியவரவே மனைவியை கண்டித்தார்.

மேலும் கடந்த 1 வருடமாக மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். அவரது செல்போன் எண்ணை வாங்கி பார்த்த போது சதீஸ்குமாருடன் தினமும் பல மணி நேரம் பேசி வந்தது தெரிய வந்தது. நண்பராக இருந்து கொண்டு தனது மனைவியுடன் பழக்கம் வைத்திருந்ததால் பிரவீன்குமார் அவரை கொலை செய்ய திட்டமிட்டார்.

இதற்காக மது அருந்த போகலாம் என கூறி நாகசமுத்திரகுளம் கரையில் உள்ள மோட்டார் அறைக்கு 3 பேரும் வந்துள்ளனர். நன்றாக மது குடித்து போதையில் இருந்த சதீஸ்குமாருக்கு புரோட்ட வாங்கி கொடுத்து சாப்பிட கூறினார். அவர் குனிந்து புரோட்ட சாப்பிட்டு கொண்டிருந்த போது 2 பேரும் அரிவாளால் சரமாரியாக வெட்டியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்துள்ளனர் என்று தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com