மாற்றுத் திறனாளி பெண்ணிடம் பாலியல் பலாத்கார முயற்சி- வாலிபர் போலீசில் ஒப்படைப்பு

வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணிடம் வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கதிராமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாற்றுத் திறனாளி பெண்ணிடம் பாலியல் பலாத்கார முயற்சி- வாலிபர் போலீசில் ஒப்படைப்பு
Published on

கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த கதிராமங்கலம் பகுதியை சேர்ந்த ஒரு விவசாயி. தனது மனைவி மற்றும் 17வயது மகளுடன் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு நேற்று சென்றார்.

அவரது மகள் வாய்பேச முடியாத நிலையில் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்து வந்தார்.

விவசாயி தனது மனைவி, மகளுடன் கோவிலில் தரிசனம் செய்து பின்னர் மாலையில் ஊருக்கு செல்ல புறப்பட தயாரானார்.

அப்போது கோவில் வளாகத்தில் நின்றிருந்த மகளை காணாதது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதனால் கோவில் சுற்றுப்பகுதிகளில் மகளை தேடி பார்த்தார். ஆனால் காணவில்லை. பின்னர் இந்த வி‌ஷயம் அப்பகுதி கிராம மக்களுக்கும் தெரியவந்தது.

இதனால் அவர்களும், இளம்பெண்ணை தேடி வந்தனர். அப்போது கிராமத்தின் வெளிபுறத்தில் உள்ள ஒரு முட்புதர் மறைவில் இளம் பெண் சத்தம் போல் கேட்டது.

இதில் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், அந்த இடத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு இளம்பெண்ணை ஒரு வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்து கொண்டிருப்பதை கண்டு திடுக்கிட்டனர்.

பொதுமக்கள் தன்னை பார்த்து விட்டதை உணர்ந்த அந்த வாலிபர் உடனே சுதாரித்து வேகமாக தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை சுற்றி வளைத்து பொதுமக்கள் பிடித்தனர்.

பிறகு அந்த வாலிபரை, பந்தநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தனர்.

இதில் அந்த வாலிபர் கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 27) என தெரியவந்தது.

வாய்பேச முடியாத அந்த இளம்பெண்ணை சுரேஷ் சைகை மூலம் அன்பாக பேசி நடித்து ஏமாற்றி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து வாலிபர் சுரேசை போலீசார் கைது செய்தனர். பிறகு அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com