பிளஸ்-2 மாணவியிடம் உல்லாசம் அனுபவித்த வாலிபர் கைது

ஒடுகத்தூர் அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பிளஸ்-2 மாணவியிடம் உல்லாசம் அனுபவித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

வேலூர்:

ஒடுகத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் தனது பாட்டி வீட்டில் தங்கி கடந்த ஆண்டு பிளஸ்-2 படித்து வந்தார்.

சேர்பாடியை சேர்ந்த குறளரசன் என்பவரும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மாணவியை குறளரசன் விவசாய நிலத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அவருடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் மாணவியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டது.

இதனால் சந்தேகம் அடைந்த அவரது பாட்டி அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து மாணவியின் பாட்டி வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் குறளரசன் மீது போக்சோ சட்டம் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com