கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது

கடலூர் முதுநகர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

கடலூர் முதுநகர்:

கடலூர் முதுநகர் அருகே எஸ்.புதூரில் ஜலகண்ட பெருமாள் கோவில் அமைந்துள்ளது. சம்பவத்தன்று காலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவிலுக்கு சென்று பார்த்த போது, கோவில் வளாகத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் பக்தர்கள் செலுத்தி இருந்த காணிக்கை பணத்தை காணவில்லை. அதனை யாரோ திருடிச்சென்றது தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் கடலூர் முதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கடலூர் கூத்தப்பாக்கத்தை சேர்ந்த மேகநாதன் மகன் ஜெய்கிருஷ்ணா (வயது 20) என்பவர் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. 

இதையடுத்து தலைமறைவாக இருந்த ஜெய்கிருஷ்ணாவை தேடி வந்தனர். இதற்கிடையே தொண்டமாநத்தம் முனியப்பர் கோவில் அருகே நின்று கொண்டிருந்த ஜெய்கிருஷ்ணாவை, சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com