பள்ளி தலைமை ஆசிரியரை மிரட்டி பணம் பறிப்பு - வாலிபர் கைது

அஞ்சுகிராமம் அருகே பள்ளி தலைமை ஆசிரியரை மிரட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

நாகர்கோவில்:

அஞ்சுகிராமம் ரோஸ் காம்பவுண்டு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 48). இவர் கனகப்பபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று மாலை வீட்டில் இருந்து அந்த பகுதியில் உள்ள கடைக்கு நடந்துச் சென்று கொண்டிருந்தார். பின்னர் அவர் பொருட்கள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அஞ்சுகிராமம் சந்திப்பில் வரும் போது அவரை வாலிபர் ஒருவர் தடுத்து நிறுத்தி குடிப்பதற்கு ரூ.500 பணம் கேட்டார். ஆனால் அவர் தன்னிடம் பணம் எதுவும் இல்லை என கூறினார்.

இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிவக்குமாரை மிரட்டி பணத்தை பறித்து கொண்டு அவரை வெட்ட முயன்றார். இதில் சுதாரித்துக் கொண்ட அவர் விலகிக் கொண்டார். இதனை பார்த்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்களை பார்த்ததும் அந்த வாலிபர் கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றார்.

இது குறித்து சிவக்குமார் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெசிமேனகா ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தலைமை ஆசிரியரை கொல்ல முயன்றது வாடியூரைச் சேர்ந்த சுகுகுமார்(27) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com