

மும்பை:
ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர் சன்னி லியோன். தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்த சன்னி லியோன் ‘வீரமாதேவி’ என்ற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு சர்வதேச அளவில் ரசிகர்கள் ஏராளம்.
ரோகித் ஜுராஜ் சவுகான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அர்ஜுன் பாட்டியாலா’ படம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திரைக்கு வந்தது. தில்ஜித், கிரித்தி சனோன், வருண் சர்மா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த படத்தில் நடிகை சன்னி லியோனும் நடித்துள்ளார்.
அர்ஜுன் பாட்டியாலா படத்தின் ஒரு காட்சியில் சன்னி லியோன் ஒரு போன் நம்பரை கூறியுள்ளார். இந்த போன் நம்பர் சன்னி லியோனுடையது என்று தவறாக புரிந்துகொண்ட ரசிகர்கள் தொடர்ந்து போன் செய்துள்ளனர். சுமார் 400-க்கும் அதிகமான போன் கால்கள் தொடர்ச்சியாக வந்ததால் அந்த நம்பருக்கு சொந்தமான புனித் அகர்வால் என்ற வாலிபர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
திரைப்படங்களில் பிரபல நடிகர், நடிகைகள் யாருக்காவது செல்போன் எண்ணை சொல்வதுபோல் காட்சி வந்தால் உபயோகத்தில் இல்லாத நம்பராக சொல்வது வழக்கம். ஆனால் இந்த படத்தில் புழக்கத்தில் இருக்கும் எண் பயன்படுத்தப்பட்டது சிக்கலாகி இருக்கிறது. படத்தில் சன்னி லியோன் சொன்னது அவரது உண்மையான நம்பர் என எண்ணி தினமும் சுமார் 100 போன்கால்கள் அர்ஜுனுக்கு வருகிறது.
இது சன்னி லியோன் நம்பர் இல்லை என்று சொல்லி சொல்லி அவர் நொந்துபோயிருக்கிறார். இந்த தொல்லையிலிருந்து விடுபட வழி தெரியாமல் தவிக்கும் அர்ஜுன் பாட்டியா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், கோர்ட்டை நாடவும் முடிவு செய்துள்ளார்.