கோவையில் 5 வருடமாக கைவரிசை- ‘பிக்பாக்கெட்’ பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்த இளம்பெண்

கோவையில் 5 வருடமாக பிக்பாக்கெட் பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் 5 வருடமாக கைவரிசை- ‘பிக்பாக்கெட்’ பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்த இளம்பெண்
Published on

கோவை:

கோவை காரமடையை சேர்ந்த சிவக்குமார் என்பவரது மனைவி அனிதாதேவி (வயது 33).

இவர் கோவை உக்கடத்தில் இருந்து வடகோவை சென்ற பஸ்சில் ஒரு பெண் பயணியிடம் ரூ.10 ஆயிரம் பிக்பாக்கெட் அடித்த போது தனிப்படை போலீசார் கையும், களவுமாக மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

இவர் கடந்த 5 ஆண்டுகளாக பஸ்களில் கூட்டநெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் நகை, பணம், செல்போன்களை பிக்பாக்கெட் அடித்தது தெரிய வந்தது.

பயணிகளுக்கு தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதால், அடிக்கடி அழகு நிலையத்துக்கு சென்று முடிஅழகை மாற்றி, சிகை அலங்காரம் செய்துள்ளார். திருடிய பணத்தில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார்.

சுய உதவி குழு தலைவியாகவும் செயல்பட்ட இவர் வங்கியில் இருந்து லட்சக்கணக்கில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. மிகப்பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்து ஆடம்பரமாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது போலீசாரிடம் சிக்கிக் கொண்டார்.

சுய உதவி குழு மூலம் வாங்கிய கடனை அடைப்பதற்காக பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இவர் இதுவரை எத்தனை பேரிடம் எவ்வளவு பணம் திருடினார்? திருட்டு பணத்தை வேறு எங்கெல்லாம் முதலீடு செய்துள்ளார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com