ஒத்தக்கடையில் 40 பவுன் நகையுடன் இளம்பெண், தோழி மாயம்

மதுரை ஒத்தக்கடையில் 40 பவுன் நகையுடன் இளம்பெண் மற்றும் தோழி மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒத்தக்கடையில் 40 பவுன் நகையுடன் இளம்பெண், தோழி மாயம்
Published on

புதூர்:

மதுரை ஒத்தக்கடை சுதந்திரநகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (25). இவரது மனைவி நிரஞ்சன பிரபா (23). குழந்தை இல்லை.

கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று வெளியே சென்ற நிரஞ்சனபிரபா அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவர் 40 பவுன் நகைையும் எடுத்துச் சென்றுள்ளார்.

இது குறித்து அவரது தாயார் தமிழ்செல்வி கொடுத்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மாயமான நிரஞ்சன பிரபாவுடன், அவரது தோழியும் சென்று விட்டதாக தெரிகிறது. இது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com