நெல்லித்தோப்பில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

நெல்லித்தோப்பில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லித்தோப்பில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
Published on

புதுச்சேரி:

புதுவை நெல்லித்தோப்பு கண்ணார வீதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் திருமணம் உள்ளிட்ட விசே‌ஷ நிகழ்ச்சிகளுக்கு அலங்காரம் செய்து தரும் தொழில் செய்து வருகிறார்.

இவரது மனைவி லட்சுமி (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இதற்கிடையே மனநிலை பாதிக்கப்பட்டு இருந்த லட்சுமி ஏற்கனவே 2 முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அவரது கணவர் சுரேஷ் தடுத்து நிறுத்தினார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை குழந்தைகளை டியூசனுக்கு அனுப்பிய லட்சுமி பின்னர் வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு ஸ்டவ் அடுப்புக்கு பயன்படுத்தும் டீசலை உடல் மீது ஊற்றி தீ வைத்து கொண்டார்.

உடல் முழுவதும் தீ பரவியதால் வலியால் லட்சுமி அலறினார். உடனே அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து தீயை அணைத்து உடல் கருகிய நிலையில் லட்சுமியை புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி லட்சுமி பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com