

கொடைக்கானல்:
கொடைக்கானல் அருகே மேல்மலை கிராமமான கவுஞ்சியை சேர்ந்தவர் மாரிமுத்து மனைவி ரஞ்சிதா(வயது30). இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மாரிமுத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அன்று முதல் மனஉளைச்சலில் இருந்த ரஞ்சிதாவும் தற்போது விஷம் குடித்து மயங்கினார். அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் ரஞ்சிதா ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.