களக்காடு அருகே இளம்பெண் தற்கொலை- ஆர்.டி.ஓ.விசாரணை

களக்காடு அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.
தற்கொலை
தற்கொலை
Published on

களக்காடு:

களக்காடு அருகே உள்ள காமநேரியை சேர்ந்தவர் விவசாயி ஆனந்தராஜ். இவரது மகள் தனுசுயாவுக்கும் (வயது 27). இவருக்கும் கட்டார்குளத்தை சேர்ந்த கடற்கரையாண்டி மகன் சந்திரகுமார் என்பவருக்கும் 29.07.2015 அன்று திருமணம் நடந்தது. திருமணத்தின் போது தனுசுயாவிற்கு 50 பவுன் தங்கநகைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.

தற்போது இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சந்திரகுமார் திருமணத்திற்கு முன்பே பலரிடம் கடன் பெற்றுள்ளார். திருமணம் முடிந்ததும் மனைவியின் தங்கநகைகளை விற்று கடன்களை திரும்ப செலுத்தியுள்ளார். எனினும் கடன் தொகைகளை முழுமையாக செலுத்தவில்லை.

இதற்கிடையே சந்திர குமாரும், அவரது தாயார் ருக்மணியும் அடிக்கடி அவதூறாக பேசி தனுசுயாவை துன்புறுத்தி வந்துள்ளனர். கடந்த 4-ந் தேதி சென்னையில் இருந்து சந்திரகுமார், தனுசுயாவிடம் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போதும் அவரை அவதூறாக திட்டியுள்ளார்.

இதுபோல ருக்மணியும், அவரை அவமானமாக பேசியுள்ளார். இதையடுத்து மனம் உடைந்த தனுசுயா வி‌ஷம் குடித்தார். வீட்டில் மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு ஏர்வாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார். இதுபற்றி அவரது தந்தை ஆனந்தராஜ் களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் லிபிபால்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். திருமணமான 4 ஆண்டில் தனுசுயா தற்கொலை செய்து இருப்பதால் அவரது சாவுக்கான காரணம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com