களக்காடு அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை

களக்காடு அருகே கள்ளக்காதலை உறவினர்கள் கண்டித்ததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
களக்காடு அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை
Published on

களக்காடு:

அம்பை அருகே உள்ள கல்லிடைகுறிச்சியை அடுத்த வைராவிகுளம் பசும்பொன்நகரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி கிருஷ்ணவேணி(வயது34). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் முத்துகுமார் கடந்த 2005-ம் ஆண்டு இறந்து விட்டார். 

இதனால் கிருஷ்ணவேணி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கிருஷ்ணவேணிக்கும், காருக்குறிச்சியை சேர்ந்த முருகன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகினர். முருகனுக்கு ஏற்கனவே திருமணமாகி சுகுமாரி என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் முருகன்- கிருஷ்ணவேணி பழகியதை முருகனின் உறவினர்கள் கண்டித்தனர். இதையடுத்து அவர்கள் களக்காடு அருகே உள்ள புலவன்குடியிருப்பு பகுதிக்கு சென்று வசித்து வந்தனர். 

அங்குள்ள கோழிப் பண்ணையில் இருவரும் வேலை செய்து வந்தனர். அதன்பிறகும் முருகனின் வீட்டார் அவர்களது கள்ளக்காதலை கண்டித்தனர். இதனால் அவர்கள் தன்னை முருகனிடம் இருந்து பிரித்துவிடுவார்களோ என எண்ணிய கிருஷ்ணவேணி திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

இதுபற்றி களக்காடு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். கிருஷ்ண வேணி தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com