டிக்-டாக் காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் தற்கொலை முயற்சி

டிக்-டாக் காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் போலீஸ் நிலையத்தில் கழுத்தை அறுத்து இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை முயற்சி
தற்கொலை முயற்சி
Published on

திருமலை:

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரியை சேர்ந்தவர் வீரபாபு (வயது 20), ஆட்டோ டிரைவர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஜூபிலி ஹில்சில் பெத்தம்மாடி அருகே வாடகை வீட்டில் வசித்து வருகிறார். பெல்லிங்மாம் பல்லியில் உள்ள பியூட்டி பார்லரில் பியூட்டிய‌ஷனாக வேலை செய்பவர் 20 வயது இளம்பெண்.

இளம்பெண்ணிற்கும், வீரபாபுவிற்கும் இடையே 5 மாதங்களுக்கு முன்பு டிக்டாக் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் சில நாட்களில் காதலாக மாறியது. வீரபாபு, காதலியை அடிக்கடி தனது அறைக்கு அழைத்து வந்து பேசியுள்ளார். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இளம்பெண், வீரபாபுவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். ஆனால் வீரபாபு திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.

இதுகுறித்து இளம்பெண் ஜூபிலி ஹல்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து விசாரணை நடத்தினர்.

ஆனால் வீரபாபு சமாதானத்தை ஏற்கவில்லை. இதனால் வேதனை அடைந்த இளம்பெண் தனது கையில் வைத்திருந்த பிளேடால் போலீசார் கண்முன்னே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை மீட்டு ஐதராபாத் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com