

தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் மூலனூர் அடுத்த சானார் பாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி. இவருக்கு 24 வயதில் மகள் உள்ளார். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. அதே பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி(வயது50). காவலாளி.
சம்பவத்தன்று துரைசாமியும், அவரது மனைவியும் வேலைக்கு சென்று விட்டனர். இதனால் அவர்களது மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனை நோட்டமிட்ட பழனிசாமி, அந்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். பின்னர் அங்கு தூங்கி கொண்டிருந்த அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பியோடி விட்டார்.
இதற்கிடையே வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய துரைசாமியின் மனைவி, தனது மகளின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து விசாரித்தபோது பழனிசாமி தான், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து தாராபுரம் அனைத்து மகளிர் போலீசில் பெண்ணின் தாய் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிசாமியை கைது செய்தனர். பின்னர் அவரை திருப்பூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.