வெம்பாக்கம் அருகே இளம்பெண் மாயம்

வெம்பாக்கம் அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
வெம்பாக்கம் அருகே இளம்பெண் மாயம்
Published on

வெம்பாக்கம்:

வெம்பாக்கம் அருகே உள்ள உக்கல் கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகள் லோகேஸ்வரி (வயது 22).

இவர், மாங்கால் கூட்ரோட்டில் உள்ள ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்ற லோகேஸ்வரி இரவு மீண்டும் வீடு திரும்பவில்லை. மாயமாகி விட்டார்.

இது குறித்த புகாரின் பேரில் தூசி போலீசார் வழக்குப்பதிந்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com