கடத்தூர் அருகே இளம்பெண் மர்ம மரணம்- தந்தை போலீசில் புகார்

இளம்பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசில் புகார் செய்தார். இறந்த இளம் பெண்ணின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
கடத்தூர் அருகே இளம்பெண் மர்ம மரணம்- தந்தை போலீசில் புகார்
Published on

கடத்தூர்:

தருமபுரி மாவட்டம் கடத்தூர் அரூர் மெயின் ரோட்டில் 7வார்டு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி சங்கீதா (வயது30). இருவருக்கும் திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு செல்வகுமார் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் கார்த்திக்கும், சங்கீதாவுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது தெரியவந்தது. 

இதுபோன்று சம்பவத்தன்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த  காணப்பட்ட சங்கீதா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கார்த்திக் சங்கீதாவின் தந்தைக்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த சங்கீதாவின் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.

இந்த சம்பவம் குறித்து சங்கீதாவின் தந்தை கடத்தூர் போலீஸ் நிலையத்தில் தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக்கிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சங்கீதாவின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் சங்கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு சங்கீதா கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்று தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com