தா.பேட்டையில் இளம்பெண்- கல்லூரி மாணவி மாயம்

தா.பேட்டையில் இளம்பெண் மற்றும் கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை தேடி வருகிறார்கள்.
தா.பேட்டையில் இளம்பெண்- கல்லூரி மாணவி மாயம்
Published on

தா.பேட்டை:

திருச்சி மாவட்டம்  தா. பேட்டை அடுத்த ஆராய்ச்சி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 45). லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் கிருத்திகா (18) .நாமக்கல் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 25-ந்தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற கிருத்திகா அதன்பிறகு  வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

இதையடுத்து  தா.பேட்டை போலீஸ் நிலையத்தில் பெருமாள் புகார் அளித்தார். புகாரின்பேரில் தா.பேட்டை இன்ஸ் பெக்டர் (பொறுப்பு) மனோகரன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து  காணாமல் போன கிருத்திகாவை தேடி வருகின்றனர்.

தா.பேட்டை அடுத்த பெருகனூர் கிராமத்தை சேர்ந்தவர் பானுமதி (44), விவசாய வேலை செய்து வருகிறார். இவரது மகள் சோபியா (18). பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 31-ந்தேதி வீட்டில் இருந்த சோபியாவை காணவில்லை. இது குறித்து  தா.பேட்டைபோலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் சோபியாவை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com