ஆண்டிப்பட்டி அருகே பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர்

ஆண்டிப்பட்டி அருகே பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டிப்பட்டி அருகே பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர்
Published on

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே தங்கம்மாள்புரத்தை சேர்ந்த குமார் மனைவி காமாட்சி (வயது24). இவர் தனது வீட்டின் முன்பு துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது நரியூத்து பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் காமாட்சியிடம் உல்லாசமாக இருக்கலாம் அதற்கு பணம் தருவதாகவும் கூறி உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த காமாட்சி மாரிமுத்துவை திட்டி விட்டு அங்கிருந்து செல்ல முயன்றார். அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார்.

ஆசைக்கு இணங்கா விட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். இருந்தபோதும் காமாட்சி வீட்டிற்குள் செல்ல முயன்றார். அவரை விரட்டி சென்று இது குறித்து வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டி உள்ளார்.

காமாட்சி சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர். இதனால் மாரிமுத்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து கடமலைக்குண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com