கோவையில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்

கோவையில் வீடு புகுந்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை தடுக்க முயன்றவருக்கு கத்தி குத்து விழுந்தது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

கோவை:

கோவை சிட்கோ அருகே உள்ள பிள்ளையார்புரத்தை சேர்ந்த 29 வயது இளம்பெண் கடந்த சில வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவரை அவரது பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர்.

சம்பவத்தன்று இளம்பெண் தனியாக வீட்டில் இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த முரளி (26) என்பவர் இளம்பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்தார். பின்னர் பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் நடப்பது என்ன என்று தெரியாமல் சத்தம் போட்டார். இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது முரளி இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அவரை மடக்கி பிடித்தனர். அப்போது முரளி கஞ்சா போதையில் இருப்பது தெரிய வந்தது. பொதுமக்களிடம் இருந்து தப்ப முயன்ற முரளி தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரது வயிற்றில் குத்தினார். இதில் அவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பொதுமக்கள் முரளிக்கு தர்ம அடி கொடுத்தனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இந்த தகவல் கிடைத்ததும் போத்தனூர் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களிடம் இருந்து முரளியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மேலும் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற முரளி மீது பாலியல் பலாத்கார முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com