பழனி அருகே வாலிபர்களை வீட்டுக்கு வரவழைத்து உல்லாசம்- பொதுமக்கள் போலீசில் புகார்

பழனியில் வாலிபர்களை வீட்டுக்கு வரவழைத்து விபசாரத்தில் ஈடுபடுவதாக பெண் மீது பொதுமக்கள் பரபரப்பு புகார் தெரிவித்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

பழனி:

பழனி அடிவாரம் பாட்டாளி தெருவைச் சேர்ந்தவர் மாலதி. இவர் மாற்றுத்திறனாளி. இவரது வீட்டுக்கு தினமும் வாலிபர்கள் வந்து உல்லாசத்தில் ஈடுபடுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனால் அவரை வீட்டை காலி செய்ய வேண்டும் என வீட்டு உரிமையாளரிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து வீட்டு உரிமையாளர் மாலதியிடம் சென்று அட்வான்சை திருப்பி கொடுத்து உடனடியாக வீட்டை காலிசெய்யுமாறு கூறினார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மாலதி வீட்டு உரிமையாளரை கடுமையாக தாக்கினார்.

இதில் படுகாயமடைந்த அவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். இதனை அறிந்தமாலதி தன்னை வீட்டு உரிமையாளர் தாக்கியதாக கூறி பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து கொண்டார்.

தான் மாற்றுத்திறனாளி என்பதால் தனக்கு ஆதரவாக உள்ளவர்களை திரட்டி போராட்டம் நடத்தப்போவதாகவும் அவர் கூறினார். இதனால் அப்பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு போலீஸ் நிலையத்துக்கு வந்தனர்.

அவர்கள் மாலதி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி குடும்பங்கள் உள்ள பகுதியில் தனது வீட்டுக்கே வாலிபர்களை வரவழைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் மாணவிகள், இளம்பெண்கள் பாதிக்கப்படுவதாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com