வேதாரண்யம் அருகே தனியாக இருந்த பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது

வேதாரண்யம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தகாத வார்த்தையால் பேசி மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த சிந்தாமணிகாடு பகுதியை சேர்ந்தவர் ராஜரெத்தினம். இவரது மனைவி மாலா (வயது 38). ராஜரெத்தினம் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் மாலா தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் மாலா இரவு வீட்டில் தனியாக இருந்தபோது அதே பகுதியை சேர்ந்த காமாட்சி மகன் காளிதாஸ் (22) என்பவர் ஜன்னலை திறந்து மாலாவிடம் தகாத வார்த்தை பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி மாலா வாய்மேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து பெண்ணை மிரட்டிய காளிதாசை கைது செய்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com