ஆத்தூர் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து

ஆத்தூர் அருகே குடிபோதையில் வாலிபரை கத்தியால் குத்திய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கத்திகுத்து
கத்திகுத்து
Published on

ஆத்தூர்:

ஆத்தூர் அருகே உள்ள சித்தையன்கோட்டையைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 28). கூலித் தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (28). சம்பவத்தன்று சரவணன் அங்குள்ள சாலையில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த பாலமுருகன் மது போதையில் திடீரென தகாத வார்த்தையால் திட்டினார். 

இதை சரவணன் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் சரவணனை கத்தியால் குத்தினார். காயமடைந்த சரவணன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது பற்றி சரவணன் கொடுத்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

ஆத்தூர் சித்தையன் கோட்டை பகுதியில் போலி மதுபானம் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதை குடிப்பவர்கள் அதிக போதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போலி மதுபானத்தால் உடல் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. எனவே இதை அதிகாரிகள் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்து அசம்பாவிதம் நடைபெறும் முன் தடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com