வாலிபரிடம் செயின் பறித்த பிரபல ரவுடிகள் கைது

பெரம்பலூர் அருகே வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செயினை பறித்து சென்ற பிரபல ரவுடிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது
கைது
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூர் அருகே உள்ள அரணாரை சேர்ந்த லோகநாதன் மகன் அருண்மணி (26). இவர், புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்.  

இந்நிலையில் சொந்த  ஊருக்கு வந்திருந்த அருண்மணி, பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டுக்கு சென்ற போது, அங்கு வந்த இளைஞர்கள் 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி அருண்மணிக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு அவர் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்து  சென்றனர்.

இது குறித்து அருண் மணி அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பெரம்பலூர்  துறைமங்கலம் கே.கே. நகரை சேர்ந்த நாரயணன் மகன் கபிலன் (24), சார்லஸ் மகன் விக்னேஷ் (22) ஆகியோர் செயினை பறித்தது தெரியவந்தது. 

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுத்தி சிறையில் அடைத்தனர். 2 பேர் மீதும் கொலை வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com