திருட்டு சைக்கிளுடன் வந்த வாலிபர் கைது- பறிகொடுத்த பெண்ணே மடக்கினார்

இளம்பெண் நிறுத்தியிருந்த சைக்கிளை திருடிச்சென்ற வாலிபர் சில தினங்களுக்கு பின்னர் அதனை ஓட்டிச்சென்றபோது கைது செய்யப்பட்டார். பறிகொடுத்த பெண்ணே அவரை மடக்கினார்.
திருட்டு சைக்கிளுடன் வந்த வாலிபர் கைது- பறிகொடுத்த பெண்ணே மடக்கினார்
Published on

சிவகாசி:

சிவகாசியில் நடந்துள்ள இந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

திருத்தங்கல்– பள்ளப்பட்டி ரோட்டை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவரது மனைவி இனியவள் (வயது 26). இவர் தனது சைக்கிளை கடந்த 12–ந்தேதி அங்குள்ள மாரியம்மன்கோவில் அருகில் நிறுத்தி விட்டு சென்று இருந்தார். பின்னர் வந்து பார்த்த போது சைக்கிளை காணவில்லை. யாரோ அதனை திடுடிச்சென்று விட்டனர்.

இது குறித்து சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சிவகாசி காமராஜர் சிலை அருகில் இனியவள் நின்று கொண்டிருந்த போது வாலிபர் ஒருவர் சைக்கிளில் வந்தார். இதைப்பார்த்த இனியவள் அது தனது சைக்கிள் என்பதை கண்டுகொண்டார். சுதாரித்துக்கொண்ட அவர் துரிதமாக செயல்பட்டு அங்கு பாதுகாப்புக்கு நின்று இருந்த போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்.

அவர்களது உதவியுடன் அந்த நபரை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரிடம் நடைபெற்ற விசாரணையில் அவர் முருகன் காலனியை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் மாடசாமி (28) என தெரியவந்தது. சைக்கிளை திருடியதாக அவரை போலீசார் கைது செய்து சைக்கிளை மீட்டனர். திருடுபோன சில தினங்களிலேயே சைக்கிள் கிடைத்ததால் இனியவள் மகிழ்ச்சி அடைந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com