கொடைக்கானலில் மனைவியை தவிக்க விட்டு காதலியுடன் ஓட்டம் பிடித்த வாலிபர்

கொடைக்கானலில் திருமணமான 55 நாளில் மனைவியை தவிக்க விட்டு காதலியுடன் ஓட்டம் பிடித்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

கொடைக்கானல்:

கொடைக்கானல் குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது26). இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி 19, என்பவருக்கும் கடந்த 55 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால்அதன்பிறகு வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீட்டிற்கு சென்றிருக்கலாம் என்று கிருஷ்ணமூர்த்தியின் மனைவி புவனேஸ்வரி மற்றும் புவனேஸ்வரியின் மாமனார் பழனிச்சாமி ஆகியோர் தேடி உள்ளனர். ஆனால் கிருஷ்ணமூர்த்தி கிடைக்கவில்லை.

இதையடுத்து புவனேஸ்வரி தனது கணவரை காணவில்லை என்று கொடைக்கானல் போலீசில் புகார் செய்தார். இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குபதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை தேடி வந்தனர்.

விசாரணையில் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த மோனிகா என்பவருடன் கிருஷ்ண மூர்த்தி பழகி வந்துள்ளார் என்பதும் இருவரும் காதலர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

கிருஷ்ணமூர்த்தி, மோனிகாவுடன் சென்னைக்கு ஓடி விட்டார் என்பதும் தெரியவந்தது. திருமணமாகி 55 நாட்களில் மனைவியை விட்டுவிட்டு காதலியுடன் ஓடிய புதுமாப்பிள்ளை கிருஷ்ணமூர்த்தியை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com