திருவள்ளூர் அருகே வாலிபர் வெட்டிக்கொலை

திருவள்ளூர் அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூர் அருகே உள்ள வெள்ளவேடு, காவல்சேரி பகுதியை சேர்ந்தவர் மனோஜ் என்கிற மணிவண்ணன் (வயது23).

நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற மனோஜ் பின்னர் திரும்பி வரவில்லை. இந்த நிலையில் காவல்சேரி காலனி சுடுகாடு அருகே மனோஜ் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வெள்ளவேடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. தனியார் கொரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த மனோஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலையில் இருந்து நின்றுவிட்டதாக தெரிகிறது.

நேற்று மாலை அவரை நண்பர் ஒருவர் வீட்டில் இருந்து வெளியே அழைத்து சென்று உள்ளார். அவர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com