குன்றத்தூரில் கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர் சிக்கினார்: 35 பவுன் நகை மீட்பு

குன்றத்தூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர் 35 பவுன் நகை மீட்பு
குன்றத்தூரில் கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர் சிக்கினார்: 35 பவுன் நகை மீட்பு
Published on

பூந்தமல்லி:

குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் ஸ்ரீபெரும்புதூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற் கிடமாக வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவன் சேலத்தை சேர்ந்த சேலம் இளம்பிள்ளை பட்டம்மன் தெருவை சேர்ந்த பிரம்மமூர்த்தி என்பதும், குன்றத்தூரில் தங்கி கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது.

அவனிடமிருந்து 35 பவுன் நகை மீட்கப்பட்டது. கைதான பிரம்மமூர்த்தி குன்றத்தூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார். பகலில் கூலி தொழிலாளியாக பணிக்கு சென்று வந்தார்.

இரவில் குன்றத்தூர், மாங்காடு, போரூர் உள்ளிட்ட பகுதிகளில் பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு தனியாக கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவன் மீது ஏற்கனவே 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

அவன் வேறு எந்தெந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளான் என்று விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com