பெரியாறு கால்வாயில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி பலி

பெரியாறு கால்வாயில் குளித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

வாடிப்பட்டி:

திண்டுக்கல் டவுன் ரவுண்டானா புதூரை சேர்ந்தவர் வீரராகவன்(வயது 36). இவருக்கும் நிலக்கோட்டை அருகே குடும்பப்பட்டியை சேர்ந்த முருகன் மகள் தவச்செல்வி (30) என்பவருக்கும் கடந்த 18-ந்தேதி திருமணம் நடந்தது. அதன்பின் விருந்துக்காக கடந்த 21-ந்தேதி வீரராகவன் மாமனார் வீட்டிற்கு வந்தார். அவர் அங்குள்ள பெரியாறு பாசன கால்வாயில் குளித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து விட்டார். அங்கிருந்த சிலர், அவரை மீட்க போராடினர். அதற்குள் மயங்கிய அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். 

இந்தநிலையில் நேற்று வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களாவில் உள்ள கால்வாயில் அவரது பிணம் மிதந்தது. வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com