மதுரையில் காதலித்து ஏமாற்றிய வாலிபர் கைது

மதுரையில் 23 வயது இளம்பெண்ணுடன் நெருக்கமாக பழகி திருமணம் செய்ய மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

திருமங்கலம்:

மதுரை பெரியார் பஸ் நிலைய பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மருந்து பொருட்களை சப்ளை செய்து வருபவர் பொள்ளாச்சியை சேர்ந்த சுரேஷ் (வயது 24). இவர் அந்த மருத்துவமனையில் உள்ள அலுவலகத்தில் பணிபுரியும் கப்பலூரைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுடன் நெருக்கமாக பழகி உள்ளார்.

நாளடைவில் இது காதலாக மாறியது. இந்த நிலையில் சுரேஷிடம் தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி உள்ளார். சுரேஷ் இதற்கு மறுப்பு தெரிவிக்கவே, அந்தப் பெண் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சுரேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com