பாகூர் அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை

பாகூர் அருகே வெடிவிபத்தில் தாய் இறந்த சோகத்தில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

பாகூர்;

பாகூர் அருகே கரையாம் புத்தூர் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் விக்ரமன், விவசாயி. இவரது மகள் சுலோசனா (வயது30). விக்ரமனின் மனைவி கடந்த  5 மாதங்களுக்கு முன்பு கரையாம்புத்தூரில் நடந்த பட்டாசு தொழிற்சாலை விபத்தில்  இறந்து போனார். 

தாய் இறந்தது முதல் சுலோசனா மனவருத்தத்துடன் இருந்து வந்தார். மேலும் சுலோசனாவுக்கு அடிக்கடி உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. இதனால் சுலோசனா விரக்தியுடன் இருந்து வந்தார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

ஆனாலும் சுலோசனா சோகத்தில் இருந்து மீளாமல் துயரத்துடன் இருந்து வந்தார். இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ள  முடிவு செய்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார். உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு சுலோசனாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் கரிக்காலம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த  டாக்டர்கள் வரும் வழியிலேயே சுலோசனா இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதுகுறித்த புகாரின் பேரில் கரையாம்புத்தூர் புறக்காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குபதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com