நாகர்கோவிலில் இளம்பெண்னை கற்பழித்த சிறுவன் கைது

நாகர்கோவிலில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இளம்பெண்னை கற்பழித்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் கோட்டார் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட 16 வயது பெண் ஒருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் அந்த சிறுவன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த பெண்ணை தனது வீட்டிற்க அழைத்துவந்தார். அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறி உல்லாசமாக இருந்துள்ளார். மேலும் அந்த பெண்ணை மிரட்டி அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தார். இந்த தகவல் அந்த பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து நாகர்கோவில் மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தா குமாரி, சப்-இன்ஸ் பெக்டர் மேரிதங்கம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

அந்த சிறுவன் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த சிறுவனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிறுவன் காப்பகத்தில் வைக்கப்பட்டு உள்ளார். அந்த சிறுவனை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com