இளம்பெண் அடித்து கொலையா?- தருமபுரி சப்-கலெக்டர் விசாரணை

திருமணமான 3 வருடத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தருமபுரி சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
கொலை
கொலை
Published on

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், மதிகோன்பாளையத்தை அடுத்துள்ள செட்டிக்கரையை சேர்ந்தவர் அள்ளிமுத்து. பெயிண்டரான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இவரது மனைவி தமிழ்செல்வி. (வயது24). இவர்களுக்கு 11 மாத பெண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று அள்ளி முத்து வீட்டிற்கு மது குடித்து வந்துள்ளார். இதனை தமிழ்செல்வி தனது கணவரை தட்டி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

இந்த நிலையில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை தமிழ்செல்வி பிணமாக கிடந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த தருமபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தூக்கில் பிணமாக கிடந்த தமிழ்செல்வியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக தமிழ்செல்வியின் பெற்றோர் எனது மகளை அடித்து கொலை செய்து விட்டார்கள் என்று போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 வருடம் ஆன நிலையில் தமிழ்செல்வி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தருமபுரி சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com