வேலூர் கோட்டை பூங்காவில் காதலனை தாக்கி இளம்பெண் கற்பழிப்பு

வேலூர் கோட்டை பூங்காவில் காதலனை தாக்கி இளம்பெண்ணை கும்பல் கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இளம்பெண் கற்பழிக்கப்பட்ட இடத்தை போலீசார் விசாரணை நடத்திய காட்சி.
இளம்பெண் கற்பழிக்கப்பட்ட இடத்தை போலீசார் விசாரணை நடத்திய காட்சி.
Published on

வேலூர்:

வேலூர் அடுக்கம்பாறை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் வேலூர் பிரபல ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். அதே கடையில் காட்பாடியை சேர்ந்த வாலிபர் ஒருவரும் வேலை பார்த்து வருகிறார்.

கடையில் வேலை பார்க்கும் போது அடிக்கடி இருவரும் சந்தித்து கொண்டதால் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. நேற்று இரவு காதல் ஜோடி இருவரும் வேலூர் கோட்டை பூங்காவில் தனியாக சந்தித்து பேச முடிவு செய்தனர்.

அதன்படி இரவு வேலை முடிந்ததும் அவர்கள் 9.50 மணிக்கு வேலூர் கோட்டை பூங்காவிற்கு சென்றனர். பூங்காவின் ஒரு ஓரத்தில் அகழி கரையை ஒட்டி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அவர்களை 3 பேர் கும்பல் நோட்டமிட்டனர். 3 வாலிபர்களும் காதல் ஜோடி அருகே வந்தனர். திடீரென அவர்கள் இளம் பெண்ணை தனியாக இழுத்தனர். அப்போது தடுத்த அவரது காதலனை அடித்து உதைத்தனர். பெரிய கத்தியை எடுத்து அவரது கழுத்தில் வைத்து மிரட்டி உட்கார வைத்தனர்.

பின்னர் இளம்பெண் அணிந்திருந்த கம்மலை பறித்தனர். அவரது செல்போனையும் பறித்து விட்டனர்.

இதனையடுத்து இளம்பெண்ணை கும்பல் கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் அலறி கூச்சலிட்டார். அப்போது இளம்பெண்ணை அந்த கும்பல் தாக்கியது. முகத்தில் காயம் அடைந்த அந்த பெண் அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடினார். சத்தம் கேட்டு அந்த பகுதிக்கு சிலர் ஓடிவந்தனர். இதனையடுத்து கும்பல் காதல் ஜோடியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

கும்பல் தாக்கியதில் படுகாயம் அடைந்த இளம்பெண் வலியால் அலறினார். செய்வதறியாது திகைத்த அவரது காதலன் இதுபற்றி வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் இளம்பெண்ணை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

காதல் ஜோடியிடம் அத்துமீறிய கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணா சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி, போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் மற்றும் போலீசார் வடக்கு போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தினர்.

அண்ணா சாலையை ஒட்டிபொதுமக்கள் போலீசார் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com