இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை- வாலிபர் போக்சோவில் கைது

ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

கோவை:

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் கோவை கணியூரில் உள்ள தனியார் பஞ்சாலையில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு அதே பகுதியை சேர்ந்த ராய்மோன் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

ராய்மோன் இளம்பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி கேரள மாநிலத்துக்கு கடத்தி சென்றார். அங்கு வைத்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனது மகளை கண்டு பிடித்து தரும்படி இளம்பெண்ணின் பெற்றோர் கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற ராய்மோகனை தேடி வந்தனர்.

சம்பவத்தன்று கேரளாவில் இருந்து கோவைக்கு ரெயிலில் வந்த ராய்மோனையும், அவருடன் இருந்த இளம்பெண்ணையும் மீட்டனர். பின்னர் 2 பேரையும் போலீசில் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

ஆசை வார்த்தை கூறி 17 வயது இளம்பெண்ணை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததால் அவரை கடத்தி சென்ற ராய் மோன் மீது கருமத்தம்பட்டி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் ராய்மோனை நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com