தேவதானப்பட்டி அருகே இளம்பெண்ணை மானபங்கம் செய்த வாலிபர் கைது

தேவதானப்பட்டி அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்ணை மானபங்கம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தேவதானப்பட்டி அருகே இளம்பெண்ணை மானபங்கம் செய்த வாலிபர் கைது
Published on

தேனி:

தேவதானப்பட்டி அருகே உள்ள ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட கீழகாமக்காபட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் வைரமுத்து. இவரது மனைவி நந்தினி(வயது26). சம்பவத்தன்று நந்தினி அதேஊரில் உள்ள காட்டுப் பகுதியில் தனியாக ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அதேஊரை சேர்ந்த குமரேசன்(30) என்பவர் நந்தினியிடம் ஆபாசமாக பேசினார். இதற்கு நந்தினி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் குமரேசன் நந்தினியிடம் தவறாக நடக்க முயன்றார்.

அங்கிருந்து தப்பிஓடிய நந்தினி ஜெயமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் குமரேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com