கரிவலம்வந்தநல்லூர் அருகே இளம்பெண் தற்கொலை- ஆர்.டி.ஓ. விசாரணை

கரிவலம்வந்தநல்லூர் அருகே இளம்பெண் துக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கரிவலம்வந்தநல்லூர் அருகே இளம்பெண் தற்கொலை- ஆர்.டி.ஓ. விசாரணை
Published on

சங்கரன்கோவில்:

கரிவலம்வந்தநல்லூரை அடுத்த பாறைப்பட்டியை சேர்ந்தவர் சுந்தரம் (55). இவரது மகள் கற்பகவள்ளி (27). இவருக்கும் காரிசாத்தானை சேர்ந்த வெள்ளத்துரை என்பவருக்கும் இடையே கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. 

இந்நிலையில் வெள்ளத்துரை, கற்பகவள்ளியை அவரது பெற்றோர் வீட்டாருடன் பேசக்கூடாது என சொல்லி தகராறு செய்து வந்துள்ளார். மேலும் அவர் யாருடன் போனில் பேசினாலும் சந்தேகப்பட்டு தகராறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் சுந்தரத்தின் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு கற்பகவள்ளியை அவர் அழைத்திருந்தாராம். இதற்கு முதலில் செல்ல அனுமதி அளித்த வெள்ளத்துரை நிகழ்ச்சி நடைபெறும் அன்று செல்லக்கூடாது என சொல்லி விட்டாராம். இதில் மனமுடைந்த கற்பகவள்ளி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் முடிந்து 4 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com