பாப்பாரப்பட்டி அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை

பாப்பாரப்பட்டி அருகே திருமணமாகி 5 வருடங்கள் ஆனநிலையில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவரிடம் சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றார்.
தற்கொலை
தற்கொலை
Published on

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை அடுத்த சுரக்காப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 25). 

இவர்களுக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணமானாது. சுரேஷ் எந்த வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். சுரேஷ் தனது மனைவி கிருஷ்ணவேணியிடம் அவரது தாயார் வீட்டிற்கு சென்று பணம் வாங்கி கொண்டு வா என்று அடிக்கடி கூறி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. 

இதனால் மனமுடைந்த காணப்பட்ட கிருஷ்ண வேணி சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த போது தூக்குபோட்டு கொண்டார். 

உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்தில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து தகவலறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமாகி 5 வருடங்கள் ஆனநிலையில் கிருஷ்ணவேணி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதால் அவரது கணவரிடம் சப்-கலெக்டர் சிவன்அருள் விசாரணை நடத்தி வருகின்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com